இத்தாலியை நெருக்கும் கொரோனா வைரஸ்... போப் பிரான்சிஸ் திடீர் சுகவீனம்: வழிபாடுகள் ரத்தானதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலி தலைநகர் ரோமையில் சிறப்பு வழிபாடு ஒன்றை முன்னெடுக்கவிருந்த போப் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக அந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாப்பரசர் பிரான்சிஸ் லேசான சுகவீனத்தால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக முன்னெடுக்கவிருந்த சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், 87 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் தற்போது தங்கியிருக்கும் அறையிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோமையின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் ஜான் லேடரன் பேராலயத்தில் முன்னெடுக்கப்படவிருந்த வழிபாடுகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இத்தாலி கடுமையாக இலக்காகியுள்ள நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் அடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 470 பேர் இலக்காகியுள்ளனர். இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

36 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சையில் இருந்து வருகின்ரனர். இருப்பினும், பாப்பரசர் பிரான்சிஸ் எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை வத்திக்கான் நிர்வாகிகள் வெளியிட மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்