இத்தாலியில் கொரோனா தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இலங்கை பெண் எப்படியுள்ளார்? வெளியான முக்கிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டம் ஹொரண ஹந்தபான்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானார்.

அவர் இத்தாலியின் Brescia நகரில் இருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அப்பெண் நோயிலிருந்து குணமாகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான தகவலை மிலனில் உள்ள இலங்கை தூதரக பொது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்