சீனா- வுஹான் மக்களுக்கு திடீர் கட்டுப்பாடுகள் விதித்த நிர்வாகம்: குடியிருப்பில் இருந்து வெளியேறவும் தடை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் முதன் முதலில் உருவானதாக கருதப்படும் சீனாவின் வுஹான் நகரில் திடீரென்று அங்குள்ள நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ள சம்பவம் மீண்டும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள மாமிச உணவு சந்தையில் முதலில் இந்த வைரஸ் உருவாகியிருக்கலாம் என கூறப்பட்டது. மட்டுமின்றி, குறித்த சந்தையில் பணியாற்றும் ஒரு பெண்மணியே முதல் நோயாளி எனவும் தகவல் வெளியானது.

ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் 27 பேரில் 24 பேர் குறித்த உணவு சந்தையை தொடர்புடையவர்கள் என தெரியவந்தாலும் எஞ்சிய மூவருக்கு கொரோனா எங்கிருந்து தொற்றியது என்ற கேள்விக்கு இன்னும் விளக்கமளிக்கப்படாமலே உள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததாக அங்குள்ள உள்ளூர் நிர்வாகம் மட்டுமின்றி சீன அரசாங்கமும் அறிவித்துள்ள நிலையில்,

தற்போது வுஹான் நகரில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் அங்குள்ள நிர்வாகத்தினர்.

மேலும் தேவையின்றி வுஹான் மக்கள் குடியிருப்புக்கு வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது அனைத்தும் சுய பாதுகாப்புக்கு என வுஹான் நிர்வாகம் தகவல் வெளியிட்டாலும், உலக நாடுகளிடம் இருந்து சீனா உண்மையை மறைப்பதாகவே சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்