சீனவில், வனவிலங்குகள் வேட்டையாட தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில், கொரோனா தொற்று அதிகம் பரவி வந்ததால் கடந்த பெப்ரவரி மாதத்தில் வனவிலங்குகள் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள சட்டத்தின்படி, வனவிலங்கு வேட்டை மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், வனவிலங்கு வைத்து விற்கும் விவசாயிகளை பழங்கள், காய்கறிகள் விவசாயம் செய்ய ஆதரவு அளித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில், வுகான் நகரில் உள்ள வனவிலங்கு விற்பனை சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக நம்பப்படுகிறது. ஆனால், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.