ஊரடங்கு தீர்வு அல்ல... கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..! பிரதமர் வலியுறுத்தல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் புதிய வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற போதிலும், ஊரடங்கு என்பது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு தீர்வு அல்ல என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்

சமுதாயத்தின் ஏழ்மையான பிரிவினர் வேலைக்குச் செல்ல முடியாததால், பாகிஸ்தானியர்கள் வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தானில் இதுவரை 75,000 கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் இம்ரான் கான்.

சுகாதார அமைப்புக்கு நெருக்கடி அதிகமாகிவிடும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்த போதிலும் மார்ச் மாதத்தில் உள்ளூர் அதிகாரிகளால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டன.

தற்போது நாட்டின் தெருக்களும் சந்தைகளும் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது.

இந்நிலையில், சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்த இம்ரான் கான், ஆனால் இன்னும் அதிகமான வணிகங்கள் இப்போது திறக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்