ஒரே நகரில் 6,70,000 பேருக்கு கொரோனா இருக்கலாம்..! சுகாதார அதிகாரிகளை அதிர வைத்த ஆய்வறிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை 30 நாள் ஊரடங்கின் கீழ் வைக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாகாண தலைநகரான லாகூரில் 6,70,000 பேருக்கு அறிகுறியற்ற நோயாளிகளாக இருக்கக்கூடும் என்று அரசாங்க மாதிரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் இவ்வாறு பரிந்துரைத்துள்ளனர்.

சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கும் லாகூரில் 27,000 க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் உள்ளன.

எந்தவொரு நகரில் இருக்கும் பணியிடமும் குடியிருப்பு பகுதியும் வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடவில்லை என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

அதிக ஆபத்தில் உள்ளவர்கள் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதிகரித்து வரும் வழக்குகள் மற்றும் பேரழிவுகரமான பொருளாதாரத்தின் மத்தியில் ஊரடங்கை தளரத்துவதைஆதரித்தார்.

ஏனெனில் பாகிஸ்தானியர்கள் வைரஸுடன் வாழ பழக வேண்டும் என்று கூறினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, பாகிஸ்தானில் 76,000க்கும் அதிகமான வழக்குகளையும் 1,621 இறப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்