வெளிநாட்டில் கீழே கிடந்த பையை திறந்து பார்த்த இந்தியருக்கு கிடைத்த தங்கம்-பணம்! அதன் பின் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில், தங்கமும், பணத்துடன் கிடந்த பையை கண்டுபிடித்து கொடுத்த இந்தியர், அந்த பை எங்கு கிடைத்து? நடந்தது என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசித்து வரும் Retesh James Gupta என்பவர், கீழே கிடந்த பை ஒன்றை பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

அந்த பையின் உள்ளே, தங்கம் மற்றும் பணம் இருந்த போதும், அதை அப்படியே வந்து ஒப்படைத்த அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஆனால், அவர் இந்த பையை எங்கிருந்து எடுத்தார்? நடந்தது என்ன? என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

gulfnews

இதையடுத்து தற்போது அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்தவர் Retesh James Gupta. இவர் துபாயில் மனைவி Aparupa Ganguly-யுடன் வசித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில், Retesh James Gupta சம்பவ தினத்தன்று Al Qusais-ல் இருக்கும் சலூன் கடைக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது அவர் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு வந்த போது, அவர் காரின் முன்பகுதியில் பை ஒன்று கிடந்துள்ளது.

இதைக் கண்ட அவர், அந்த பைக்கு சொந்தக்காரர் எப்படியும் வருவார் என்று சுமார் 30 நிமிடம் அங்கு காத்திருந்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை.

gulfnews

அதன் பின் அந்த பையின் உள்ளே ஏதேனும் விபரம் இருக்குமா என்று பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பை உள்ளே அமெரிக்க டொலர்கள், தங்கங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளது.

இது குறித்து உடனடியாக தன் மனைவிக்கு அவர் போன் செய்து பேச, அவர் உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள், இது கடவுள் நம்மை சோதிக்கும் நேரம் என்று கூறியுள்ளார்.

ஏனெனில், சமீபத்தில் தான் Retesh James Gupta தன்னுடைய வேலையை இழந்துள்ளார். மனம் மாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக Al Qusais காவல்நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

அந்த பையை எடுத்து சென்று பொலிசாரிடம் ஒப்படைக்கும் போது, அதில் இருந்து ஏதேனும் பணம் மற்றும் நகை காணவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மட்டும் தனக்குள் இருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று Retesh James Gupta கூறியுள்ளார்.

இந்த பையை ஒப்படைத்த அடுத்த நாள், அந்த பைக்கு சொந்தக்கார நபர் உடனடியாக Retesh James Gupta-வை போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். பையை பறிகொடுத்த நபர் அமெரிக்கா சென்றுவிட்டதால், Retesh James Gupta-வை நேரில் பார்க்க வர முடியவில்லை.

இருப்பினும் அவருடைய நேர்மையை பாராட்டி, தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அதன் பின் Retesh James Gupta-வின் நேர்மையை பாராட்டு அவரை பொலிசார் கவுரத்தனர்.

gulfnews

மேலும், இந்த சம்பவத்திற்கு பின் வேலை இழந்து தவித்து வந்த அவருக்கு வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இவரின் இந்த செயலைக் கண்டு இந்தியாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் போன் செய்து வாழ்த்துவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இவர் கண்டுபிடித்த பையில் 14,000 டொலர் நோட்டுகளும், 200,000 திர்ஹாம் மதிப்பு கொண்ட நகைகளும், மூன்று பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்