வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இளைய சகோதரி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு! யாருக்கு தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகத்துவம் பற்றி அரிய அந்நாட்டை சேர்ந்த நர்சரி குழந்தைகள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங்கின் சகோதரி, கிம் யோ-ஜாங், இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவு வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25 அன்று இது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதற்கு முன்னதாக, நர்சரி பள்ளி குழந்தைகள் கிம் ஜாங் உன் பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது.

அதன்படி கிம் ஜாங் உன் வெறும் ஐந்து வயதாக இருந்தபோது, அவர் ஒரு பிரகாசமான குழந்தையாக இருந்தார், அவர் ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிக்க விரும்பினார் என்று புதிய பாடத்திட்டம் நர்சரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது எனக் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்