பயங்கர ஆயுதங்களுடன் மிக மோசமான 219 குற்றவாளிகள் சிறையிலிருந்து தப்பியோட்டம்: திணறும் இராணுவம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

உகாண்டா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிறை பாதுகாவலர்களைக் தாக்கி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பிராந்தியமான கரமோஜாவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சுமார் 219 கைதிகள் புதன்கிழமை தப்பிச் சென்றதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஃபிளேவியா பைக்வாசோ தெரிவித்தார்.

தப்பி ஓடுவதற்கு முன்பு கைதிகளில் சிலர் சிறை ஆயுத கிடங்கிற்குள் நுழைந்து 15 ஏ.கே.-47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளை திருடி சென்றுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தப்பி ஓடிய கைதிகளை மீண்டும் பிடிப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

நடவடிக்கையின் ஒரு பகுதியாக தப்பி ஓடிய கைதிகளில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தப்பித்தவர்கள் மிக மோசமான குற்றவாளிகள், அவர்களில் கொலைகாரர்கள், கொள்ளையர்கள் மற்றும் கற்பழிப்பாளர்கள் அடங்குவர் என அவர் கூறினார்.

அவர்களிடம் சில ஆயுதங்கள் இருப்பதால் இரவில் தேடுவது மிகவும் கடினமானது. அவர்கள் தலைமறைவாக இரவு முழுவதும் நேரம் இருக்கிறது, இது எங்கள் முயற்சிகளை சிக்கலாக்குகிறது, ஆனால் நாங்கள் அவர்கள் அனைவரையும் பிடிப்போம் என பிரிகேடியர் ஃபிளேவியா பைக்வாசோ தெரிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்