வடகொரியா மக்களுக்கு எச்சரிக்கை! சீனாவில் இருந்து வீசும் தூசியால் கொரோனா தாக்க கூடும்: வெளியான முழு தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
93Shares

சீனாவிலிருந்து வீசும் ‘மஞ்சள் தூசி’ கொரோனா வைரஸைக் கொண்டு வரக்கூடும் என்ற அச்சத்தில் வட கொரியா தனது குடிமக்களை வீட்டுக்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் பியோங்யாங்கின் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் இல்லை என்று வட கொரிய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் ஜனவரி மாதம் முதல் எல்லை மூடி மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் வித்தது.

வட கொரியா அரசு கட்டுப்பாட்டில் உள்ள கே.சி.டி.வி புதன்கிழமை சிறப்பு வானிலை பிரிவுகளை ஒளிபரப்பியது, அதில், அடுத்த நாள் மஞ்சள் தூசி வரும் என எச்சரிக்கை விடுத்தது.

மேலும், வெளிப்புற கட்டுமான பணிகளுக்கு நாடு தழுவிய தடையை அறிவித்தது.

ஆனால், தூசிக்கும் கொரோனாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் தூசி என்பது மங்கோலிய மற்றும் சீன பாலைவனங்களிலிருந்து வரும் மணலைக் குறிக்கிறது, அவை ஆண்டின் சில நேரங்களில் வடக்கு மற்றும் தென் கொரியாவில் வீசுகின்றன.

இது நச்சு தூசியுடன் ஒன்றோடொன்று சேர்ந்துள்ளது, பல ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுகாதார கவலைகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்