பாதாள சாக்கடை மூடி வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட சிறுவன்! பின்னர் நடந்த ஆச்சரியம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சீனாவில் பாதாளச் சாக்கடை மூடி வெடித்ததில் சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின்வடமேற்குப் பகுதியில் கான்ஷூ மாகாணத்தில் தான் இது நடந்துள்ளது. அங்கு சாலையோரத்தில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு சிறுவன் பாதாளச் சாக்கடை மூடியில் பட்டாசு வைத்தபோது, அது வெடித்துச் சிதறியது, இதை பார்த்த அருகிலிருந்தவர்கள் சிறுவனின் நிலையை கண்டு பதறினர்.

ஆனால் தலைகீழாகத் தூக்கி வீசப்பட்ட சிறுவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாதாளச் சாக்கடையில் மீத்தேன் வாயு அதிகமிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்