பொலிசாரை கொன்ற சேவல்: சேவல் சண்டையை தடுக்கச் சென்றபோது நிகழ்ந்த பரிதாபம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
386Shares

பிலிப்பைன்சில் தடையை மீறி சேவல் சண்டை நடப்பதாக தெரியவரவே, ரெய்டுக்காக சென்றுள்ளார் பொலிசார் ஒருவர்.

Lieutenant Christian Bolok என்னும் அந்த பொலிசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட ஒரு சேவலை பிடித்ததுடன், சட்டவிரோதமாக சேவல் சண்டை நடந்ததற்கான ஆதாரங்களைத் திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அப்போது அந்த சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கூர்மையான கத்தி Bolokஇன் தொடையில் குத்தியிருக்கிறது.

தொடையிலிருந்த பிரதான இரத்தக்குழாய் ஒன்று வெட்டுப்பட, இரத்தம் பீறிட்டு வெளியேறியிருக்கிறது.

ஏராளமான இரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Bolok. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மூன்று பேரை கைது செய்துள்ளார்கள்.

இரண்டு ஜோடி கத்திகளுடன், சூதாட்டத்தில் பந்தயம் கட்டிய பணமான 550 பிலிப்பைன்ஸ் பெசோக்களும், ஏழு சண்டைச் சேவல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்