இளம்பெண்ணை கவர தனது உடையில் இளைஞன் எழுதியிருந்த வார்த்தைகள்! பின்னர் அவருக்கு ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி.. புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
210Shares

இத்தாலியில் சுகாதார ஊழியர் தனது காதலியிடம் வெளிப்படுத்திய சம்பவத்தின் பின்னணி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக தான் காதலிக்கும் காதிலியிடம் காதலை வெளிபடுத்த இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாழ்வது வழக்கம். உயரமான பகுதியில் காதலை வெளிபடுத்துவது, கிரிக்கெட் மைதானத்தில் காதலை வெளிபடுத்துவது என சமீபத்தில் பல்வேறு காதல் கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு பிசியான மருத்துவமனையில் தான் காதலிக்கும் காதலியிடன் காதலை சொல்ல ஒரு சுகாதார ஊழியர் வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.

இத்தாலியின் புக்லியாவில் உள்ள ஒஸ்டுனி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணியாற்றி வருபவர் கியூசெப் புங்கேண்டே, கொரோனா வார்டில் பணியாற்றிவரும் இவர் தனது அயராத பணிக்கு மத்தியில் காதலிக்கும் தனது காதலியிடம் காதலை வெளிபடுத்த திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தான் அணிந்திருந்த கொரோனா பாதுகாப்பு உடையின் பின்புறம் “கார்மெலி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா” ஆம் மற்றும் இல்லை என எழுதி அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதில் சுகாதார ஊழியரின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அவரது காதலி கார்மெலி காதலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார், இது அவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தனது அயராத பணியிலும் தன் காதலியிடம் காதலை வெளிபடுத்திய சுகாதார ஊழியருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்