குளியல் தொட்டியில் இறந்து கிடந்த விமான பணிப்பெண்; சக ஊழியர்கள் செய்த கொடூரம்! நீதி கேட்டு குமுறும் தாய்..

Report Print Ragavan Ragavan in ஏனைய நாடுகள்
1200Shares

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்டின் ஏஞ்சலிகா டசெரா என்ற 23 வயது Philippines Airline பணிப்பெண், தனது சக ஊழியர்களுடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, மக்காட்டி மணிலா நகரில் உள்ள நான்கு நட்சத்திர ஹோட்டலான சிட்டி கார்டனுக்கு சென்றுள்ளார்.

இரவில் கொண்டாட்டம் முடிந்த நிலையில், புத்தாண்டு அன்று காலை 10 மணியளவில் அவர் ஒரு குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் மது அருந்தியதாக தெரிகிறது. அன்று காலை 10 மணிக்கு முழித்து பார்த்த ஏஞ்சலிகாவின் சக ஆண் ஊழியர் Rommel Daluro Galida, அவர் குளியல் தொட்டியில் படுத்திருப்பதை பார்த்து தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்து போர்வையும் போர்த்திவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் சில மணி நேரங்கள் கழித்து அவரை எழுப்ப சென்ற அவர், ஏஞ்சலிகா பேச்சு மூச்சின்றி கிடப்பதையும், அவரது உடல் நீல நிறத்தில் மாறியிருப்பதையும் பார்த்து பயந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பார்த்தபோது, மருத்துவர்கள் அவர் இறந்து வெகுநேரம் ஆனதாக கூறினர்.

மர்மமான முறையில் இறந்து கிடந்த கிறிஸ்டின் ஏஞ்சலிகா டசெராவின் உடன் முழுவது சேதமடைந்துள்ளதால், அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என Philippine National Police தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், பார்ட்டிக்கு வந்த அனைத்து 11 பேரையம் சந்தேகிக்கும் பொலிஸ், அவர்களில் 3 பேரை கைது செய்துள்ளனர். Rommel Daluro Galida (29) உட்பட John Pascual Dela Serna III (27) மற்றும் John Paul Reyes Halili (25) ஆகிய 3 பேர் 'கற்பழித்து படுகொலை' செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதம் உள்ள 9 போரையும் தேடிவருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஏஞ்சலிகாவின் பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்காக காத்திருப்பதாகவும், சம்பவம் நடந்த அன்று ஏஞ்சலிகா குடித்திருந்தாரா என்பதை அறிய toxicology சோதனை செய்துள்ளதாகவும் Makati சிட்டி பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் கொடூரமாக இறந்த மக்களை நினைத்து வேதனையில் இருக்கும் ஏஞ்சலிக்காவின் தாய் Sharon Dacera "என் மகள் மற்ற விமான உதவியாளர்களுடன் இருந்ததால் அவளுக்கு எதுவும் ஆகாது எனறு நம்பியிருந்தேன். அவர்கள் ஏன் என் குழந்தையை இப்படி செய்தார்கள்? என் மக்களுக்கு நிதி வேண்டும்" என கதறுகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்