பசுபிக்கின் அடியில் விசித்திர மீனினங்கள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனையவை

பசுபிக்கின் ஆழமான பகுதிகளில் ஒன்றான அக்கடாமா கால்வாயில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வில் 3 புதிய ஸ்னெயில் வகை மீனினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இம் மீனினங்கள் கடல் மேற்பரப்புக்கு கீழாக கிட்டத்தட்ட 21,000 அடிகளுக்கு மேற்பட்ட ஆழத்தில் வசிப்பதாக தெரியவருகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் கண்டுபிடிக்கப்பட்ட மீனினங்கள் நீளமானதாக, வழுவழுப்பானதாக காணப்படுவதுடன் ஒளி ஊடுபுகவிடும் தோலினைக் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

இம் மீனினங்கள் தற்காலிகமாக ஊதா, நீல, இளஞ்சிகப்பு அக்கடாமா ஸ்னெயில்பிஷ் எனப்பெயரிடப்பட்டுள்ளன.

இவை செதில்களற்றவை. இவற்றின் கடினமான என்புகள் மற்றும் பற்கள் காதின் உட்புறமாகக் காணப்படுகின்றன.

இவ்வுருக்கள் காரணமாக அவற்றுக்குச் சமநிலை கிடைக்கப்பெறுவதாகவும், கடலின் ஆழமான பகுதிகளில் அவை வாழ உதவியாக இருப்பதாகவும் தெருவிக்கப்படுகிறது.

அவற்றின் வழுவழுப்பான உடலமைப்பு காரணமாக அவற்றுக்கு கடலின் அடியில் காணப்படும் உயர் அமுக்கத்தை தாங்கும் திறன் கிடைக்கப்பெறுகிறது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers