ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன்: தங்க மகன் மாரியப்பன்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த தங்க மகன் மாரியப்பன் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார்.

தற்போது மாரியப்பன் தங்கவேலு கூறுகையில், ரியோவில் இருக்கும் ஒவ்வொரு இரவிலும் நான் தூங்காமல் இருக்கிறேன். அதைத் தவிர ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

தற்போது தான் பதக்கம் பெற்றவுடன் தங்களை இழிவுபடுத்திய சொந்தங்கள் எல்லாம் தற்போது எங்களை தேடி வருவதாகவும் கூறி என் அம்மா என்னிடம் அழுகிறாள். தான் பதக்கம் வெல்வதற்கு முக்கிய காரணமே என் பயிற்சியாளர் சத்ய நாரயணன் தான் எனவும் அதைத் தவிர வேறு யாருக்கும் இதில் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.

தன்னையும், தன் தாயையும் விட்டு சென்ற என் தந்தை தற்போது சொந்த கொண்டாட வருவதாக கூறி என் அம்மா மேலும் அழுகிறாள். இதனால் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கிறது, என் அம்மாவை எப்போது பார்ப்பேன் என்று இருக்கிறது.

மேலும் தங்களை பரிதவிக்க விட்டுச் சென்ற தன் தந்தை தங்கவேலுவை நான் பார்க்க விரும்பவில்லை எனவும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை விட மாரியப்பன் என்று அழைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments