அட..! டோனி மேல இவ்வளவு பாசமா? பாகிஸ்தான் ரசிகர் செய்த வேலையை பாருங்க

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டோனியின் பெயரில் பாகிஸ்தான் ஜெர்சியை அணிந்து வலம் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் டோனியின் பெயர் மற்றும் அவரது ஜெர்சி நம்பர் கொண்ட பாகிஸ்தான் உடையை அணிந்து வலம் வந்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்திய வீரரான டோனியின் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறாரே என்று அவரை பாராட்டினர்.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சண்டையிட்டுக் கொள்ளும் அதே வேளையில் இவரது செயலுக்கு சமூகவலைதளத்திலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இருப்பினும் கடந்த வாரம் அசாமில் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் அப்ரிடியின் உடையை அணிந்த இந்திய ரசிகர் கைது செய்யப்பட்டார்.

அதே போல் பாகிஸ்தானில் விராட் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் இந்திய கொடியை தனது வீட்டின் மேல் பறக்கவிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments