வைரலாகும் விராட் கோஹ்லியின் மகளிர் தினச் செய்தி

Report Print Balamanuvelan in ஏனைய விளையாட்டுக்கள்
154Shares
154Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியின் மகளிர் தினச் செய்தி அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதுவரை சுமார் 95,000 பேர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

அப்படி என்னதான் இருக்கிறது அந்த வீடியோவில்?

ஆண்களும் பெண்களும் சமமில்லை என்று தொடங்கும் அந்த வீடியோ, ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்று முடிகிறது.

பாலியல் துன்புறுத்தல்கள், பாலினப்பாகுபாடு, குடும்ப வன்முறை போன்ற இத்தனைக்கும் மத்தியில் பெண்கள் எழுந்து பிரகாசிக்கிறார்கள்.

அவர்கள் ஆண்களுக்கு சமம் என்று எண்ணுகிறீர்களா? என்னும் கேள்வியை எழுப்பும் கோஹ்லி, இல்லை பெண்கள் ஆண்களை விடச் சிறந்தவர்கள் என்னும் பதிலையும் அளிக்கிறார்.

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என்னும் அவரது வாழ்த்துச் செய்தியோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்