சிக்ஸர் கேட்ட டோனியின் மனைவி: வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டோனி சிக்ஸர் விளாசியபோது, அவரின் மனைவி ‘One more six' என கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 206 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கினை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில், சென்னை வீரர் டோனி 34 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார்.

இந்நிலையில், போட்டியை பெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த டோனியின் மனைவி சாக்‌ஷி, தொடர்ச்சியாக டோனி சிக்ஸர் விளாசியபோது ‘One more six' என அறைகூவல் விடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்