ஒரே நேரத்தில் இரு பெண்களை மணக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ!

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலின் திறன்மிக்க கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரொனால்டினோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்கிழார்.

ஓய்வு பெற்ற ரொனால்டினோ வரும் ஆகஸ்ட் மாதம் ரியோ டி ஜெனிரோவில் உள்ள தனது வீட்டிலேயே இரு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்யதாக தெரியவந்துள்ளது.

இந்த இரு பெண்மணிகளும் முன்னாள் கால்பந்து வீராங்கனைகளான பிரிஸ்கில்லா கோலிஹோ மற்றும் பீட்ரிஸ் சவுஸா ஆவார்கள்.

பிரேசில் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் இந்த திருமணத்திற்கு ஆறு ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இரண்டு பெண்களுக்கு ஒரு திருமண விழா என்பதால் இதனை இரு திருமணங்களாக கருத வேண்டாம் என்று ஒரு வித்தியாசமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...