இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலை எச்சரித்த ரோகித் சர்மாவின் மனைவி: ஏன் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் புகைப்படத்திற்கு கமெண்ட் தெரிவித்த சஹாலிற்கு ரோகித் சர்மாவின் மனைவி எச்சரிக்கை விடும் வகையில் கமெண்ட் செய்துள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் டி20, அடுத்து ஒருநாள் தொடர் தற்போது டெஸ்ட் தொடர் என மூன்றுவித தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியதால், இந்த தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்று கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.

அதில் ரோகித் சர்மாவின் பெயர் இல்லை. இதற்கு ரோகித் சர்மா தேர்வுக் குழுவை குத்தி காட்டும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதையடுத்து ரோகித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், ரோகித் சர்மா உங்களை மிகவும் மிஸ் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார்.

உடனே இதைக் கண்ட ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, அவன் எனக்கு சொந்தமானவன் என்று கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers