தங்கள் அணி வீரர்களை விற்று ஆடுகளை வாங்கிய கால்பந்து அணி: காரணம் இதுதான்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

துருக்கியைச் சேர்ந்த கிளப் கால்பந்து அணி ஒன்று, பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களது அணி வீரர்களை விற்று ஆடுகளை வாங்கியுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த மிகச் சிறிய கால்பந்து கிளப் அணியான கல்ஸ்போர், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனால் கிளப் அணி தனது வருமானத்தைப் பெருக்க புது விதமான யுக்தியை கையாண்டது.

அதன்படி, தங்களது அணி வீரர்கள் 18 பேரை விற்று 10 ஆடுகளை வாங்கியிருக்கிறது. இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் பால், இறைச்சியை விற்று கிடைக்கும் வருமானத்தில் கிளப்புக்கான செலவுகளை சமாளிக்கும் திட்டத்தில் அணி நிர்வாகம் உள்ளது.

இதுகுறித்து கிளப்பின் தலைவர் கெனான் பையுக்லெப்லெபி கூறுகையில், ‘வீரர்களை விற்று ஆடுகளை வாங்கிய நடவடிக்கையால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டோம். நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறோம்.

எங்களுக்கு நிதியுதவி செய்வதற்கு விளம்பரதாரர்கள் கிடைப்பதில்லை. அரசாங்கமும் எங்களை ஆதரிப்பதில்லை. அதனால் தான் எங்கள் வீரர்களை விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஒரு தொழில் ஆரம்பித்து, பிற்காலத்தில் இந்த கிளப்பில் உள்ள வீரர்களை சிறந்தவர்களாக உருவாக்க முடிவு செய்தோம்.

எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இந்த 10 ஆடுகளை வைத்து, அடுத்த சில ஆண்டுகளில் 140 ஆடுகளை உருவாக்குவதுதான் எங்களது குறிக்கோள். இப்போது எங்களுக்கு தேவை நிலையான வருமானம்தான்’ என தெரிவித்துள்ளார்.

இந்த கிளப் அணி 18 வீரர்களை இந்திய மதிப்பில் 1,80,000 ரூபாய்க்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers