பாலியல் குற்றச்சாட்டு: 1 பில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்ததை இழக்கும் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
402Shares
402Shares
ibctamil.com

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாரை அடுத்து விளம்பர நிறுவனங்கள் அவரை கைவிட நேர்ந்தால், சுமார் ஒரு பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான விளம்பரங்களை அவர் இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது தனித்துவமான திறமையாலும், கடின உழைப்பாலும் சுமார் 350 மில்லியன் பவுண்ட்ஸ் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.

கடந்த 2009 ஆம் அண்டு நடந்த ஒரு விவகாரத்தால் தற்போது தனது எதிர்காலத்தையே இழக்கும் நிலைக்கு ரொனால்டோ தள்ளப்பட்டுள்ளார்.

சமீப நாட்களாக அமெரிக்க மொடல் அழகி எழுப்பும் பாலியல் புகாரை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறும் பிரபல நிறுவனங்கள், தங்கள் நற்பெயரை காத்துக் கொள்ள ரொனால்டோவை கைவிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த புகாரை ரொனால்டோ கடுமையாக மறுத்து வந்தாலும், ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளது என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ள Nike நிறுவனம், தொடர்ந்து இந்த விவகாரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

உலகில் அதிக வருவாய் ஈட்டும் நட்சத்திர வீரரான ரொனால்டொ(33) கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் 70 மில்லியன் பவுண்ட்ஸ் ஊதியமாக பெற்றுள்ளார்.

Nike நிறுவனம் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 760 மில்லியன் பவுண்ட்ஸ் தொகைக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்து கொண்டது.

மட்டுமின்றி தற்போது Juventus அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரொனால்டோவின் ஆண்டு ஊதியம் 28 மில்லியன் பவுண்ட்ஸ் ஆகும்.

தற்போது அமெரிக்க மொடல் அழகியின் பாலியல் புகார் சூடு பிடித்துள்ள நிலையில் போர்த்துகல் அணி ரொனால்டோவை தங்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

இதே நிலை நீடித்தால் ரொனால்டோ விளம்பர தூதுவராக இருக்கும் நிறுவனங்களும் அவரை கைவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்