அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு: மீண்டும் அணிக்கு திரும்பும் ரிக்கி பாண்டிங்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டேவிட் சாக்கர், சமீபத்தில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அதிரடி அறிவிப்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

5 உலகக்கோப்பை தொடரில் விளையாடியதோடு, 3 தொடர்களில் கேப்டனாகவும் 2003 மற்றும் 2007ம் ஆண்டுக்கான தொடரில் கோப்பையை வென்றும் அசத்திய ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளர் பிரிவில் சேர்த்துள்ளது.

ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேன்ஜெர் உடன் இணைந்து உதவி பயிற்சியராக பணியாற்றுவார் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள பயிற்சியாளர் ஜஸ்டின் லேன்ஜெர், உலகக்கோப்பையை வெல்வதற்கு என்ன தேவை என்பது ரிக்கிக்கு நன்கு தெரியும். பேட்டிங் குழுவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணிக்கும் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்.

அவர் விளையாட்டை பற்றிய ஒரு சுவாரஸ்யமான புரிதலை கொண்டுள்ளார். உயர்மட்டத்தை தயார் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers