கிரிக்கெட் உலக்கோப்பையை தோற்றாலும் வேறு சாதனை படைத்த நியூசிலாந்து.. என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் 11 முறை சம்பியனான அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியும் தோற்றது நியூசிலாந்து அணி.

இது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

அதாவது நியூசிலாந்து அணி உலகக்கோப்பை வலைப்பந்தாட்டப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers