அபார வெற்றி பெற்ற இலங்கை! பைக் ஓட்டி வெற்றியை கொண்டாடிய போது கீழே விழுந்த வீரர்கள்... வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் மைதானத்தில் பைக்கில் சென்ற போது சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இந்நிலையில், இலங்கை அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், சேஹன் ஜெயசூர்யா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் இருவரும், இலங்கை அணிக்கு பரிசாக அளிக்கப்பட்ட மோட்டார் பைக் ஒன்றை எடுத்துகொண்டு பிரேமதாசா மைதானத்தை சுற்றியடித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மோட்டார் பைக் சறுக்கியதால் இருவரும் கீழே விழுந்தனர்.

இதை பார்த்து பதறிய மைதானத்தில் இருந்த ஊழியர்கள் இருவருக்கும் உதவி செய்து அவர்களுக்கு கை கொடுத்து எழுப்பினார்கள்.

மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததாலேயே பைக் சறுக்கியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்