ஏன் இந்த கொலைவெறி..? வைரலாகும் பாண்ட்யா சகோதரர்களின் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா இருவரும் தமிழ் பாடலை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இன்று மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய அணியில் இடம்பிடித்த குர்ணால் பாண்ட்யா, டி20 தொடர் முடிந்தபோது சிறந்த வீரராக தெரிவானார். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடலை, தனது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து பாடுகிறார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பாடல் உலக அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்