ஐபிஎல் தொடர் 2020ல் பிரபல தொகுப்பாளர் மாயந்தி லாங்கர் கலந்து கொள்ள மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஐபிஎல் உலகில் தனக்கு என்று தனியாக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்தான் மாயந்தி லாங்கர்.
ஐபிஎல் மட்டுமின்றி பல்வேறு பிசிசிஐ போட்டிகள், உலகக் கிண்ணம் போட்டிகளையும் இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இவருக்கு தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருங்கிய நண்பர். கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி உடனான நட்பு ஒருகட்டத்தில் நெருக்கமாகி, அது காதலாக மாறி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மாயந்தி லாங்கர் தொகுத்து வழங்க மாட்டார் என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாகவே உறுதி செய்துவிட்டது.
அதற்கான காரணத்தை அவரே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். மாயந்தி - பின்னி ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதனால், ஐபிஎல் தொடரில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. மே மாதம் போட்டி நடந்து இருந்தால் கண்டிப்பாக தொடரில் கலந்து கொண்டு இருந்திருப்பேன் என்று மாயந்தி குறிப்பிட்டுள்ளார்.
தான் கர்ப்பமாக இருந்த போது முக்கியமான சில உதவிகளை ஐபிஎல் நிர்வாகம் செய்தது. இதற்கு மிக்க நன்றி. விரைவில் மீண்டும் தொகுப்பாளினியாக திரும்பி வருவேன் என்று இவர் கூறியுள்ளார்.
மேலும், தான் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மாயந்தி வெளியிட்டு இருக்கிறார். இதுதான் இவரின் நீக்கத்திற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்