சீனாவுக்கான புதிய நிர்வாக இயக்குநரை நியமித்தது ஆப்பிள்!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களை சீனாவை மையப்படுத்தியும் பிரம்மாண்டமான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இங்கிருந்து பல துணைப் பாகங்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவுக்கான புதிய நிர்வாக இயக்குநரை நியமித்துள்ளது.

இதன்படி Isabel Ge Mahe என்ற பெண்மணி கடமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இவர் முன்னர் ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான மென்பொருள் பொறியியல் துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர Apple Pay, HomeKit மற்றும் CarPlay போன்ற ஆப்பிளின் ஏனைய சில திட்டங்களிலும் பணி புரிந்துள்ளார்.

இவரே சீனாவுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் குழுவினரை வழிநடாத்த பொருத்தமானவர் என அந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான டிம் குக் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments