வினோத வகை டைனோசர் வாழ்ந்தமைக்கான ஆதாரம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
44Shares
44Shares
ibctamil.com

இராட்சத உருவம் கொண்ட பல்வேறு இன டைனோசர் வகைகள் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அறிந்ததே.

இப்படியிருக்கையில் வழமைக்கு மாறாக மெல்லிய உடலமைப்பினைக் கொண்ட டைனோசர்களும் வாழ்ந்தமைக்கான ஆதாரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள 113 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த குன்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வான்கோழி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த டைனோசர் படிமத்தை கண்டுபிடித்ததன் ஊடாக உலகின் பல பாகங்களை டைனோசர்கள் சுற்றி வந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் கால்கள் 3 தொடக்கம் 4 கிலோகிராம்கள் மட்டுமே எடையை கொண்டிருந்திருக்கலாம் எனவும் கால்கள் மிகவும் உறுதி வாய்ந்தவையாகவும் இருந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்