இணைய இணைப்பில் புதிய புரட்சி: இரு செயற்கைக்கோள்கள் விண்ணிற்கு பறந்தது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
94Shares
94Shares
lankasrimarket.com

Elon Musk என்பவரால் உருவாக்கப்பட்ட SpaceX எனும் நிறுவனம் விண்வெளிக்கு ரொக்கெட்டுக்களை அனுப்பும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனம் இணைய இணைப்பினை வழங்குவதற்காக சுமார் 12,000 செயற்கைக் கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கடந்த 2015ம் ஆண்டு அறிவித்திருந்தது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரு செயற்கைக் கோள்களை கடந்த வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியுள்ளது.

அடுத்த வருடம் புரோட்பான்ட் இணைய சேவையை வழங்கக்கூடிய இவ்வாறான 4,425 செயற்கைக் கோள்கள் செலுத்தப்படவுள்ளன.

இவை அனைத்தும் பூமியில் இருந்து சுமார் 700 தொடக்கம் 800 மைல்கள் தொலைவில் நிலைகொள்ளச் செய்யப்படும்.

இவ்வாறு கட்டம் கட்டமாக 12,000 செயற்கைக் கோள்களும் செலுத்தப்படவுள்ளன.

இவ் எண்ணிக்கையானது தற்போது ஏனைய தேவைகளுக்காக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களின் எண்ணிக்கையினை விடவும் இரண்டு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்