அமேஷானின் அலெக்ஸ்சா சாதனத்தில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
16Shares
16Shares
lankasrimarket.com

அமேஷான் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட அலெக்ஸ்சா எனும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆனது உலகளவில் பிரபல்யமடைந்து வருகின்றது.

தற்போது இச் சாதனத்தில் மேலும் ஒரு புதிய வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது DVR சாதனத்தினைப் பயன்படுத்தி வீடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

இது தொடர்பிலான அறிவிப்பினை அமேஷான் நிறுவனம் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.

இவ் வசதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கு உதாரணமாக “Alexa, Record the Cubs Game,” என உச்சரித்தால் போதும், தானாகவே பதிவினை ஆரம்பித்துவிடும்.

அதேபோன்று “Alexa, Pause,” போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு DVR சாதனத்தின் பெயரை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்