அசால்ட்டாக மனிதர்களை தாக்கும் ரோபோ உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ரோபோ வடிவமைப்பில் முன்னணியில் விளங்கும் Boston Dynamics நிறுவனம் தற்போது மனிதர்களை தாக்கக்கூடிய ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது.

முற்றிலும் மனித அசைவுக்கு நிகரான அசைவினைக் காட்டக்கூடியதாக இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தன்னை தாக்க வருபவர்களை இனங் கண்டு அசால்ட்டாக திருப்பி தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

மேலும் தூண்டல்களுக்கு ஏற்ற துலங்கல்களைக் காட்டக்கூடிய வகையிலான தொழில்நுட்பமும் இந்த ரோபோவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேவையேற்படும்போது உதவக்கூடியதாகவும், சிறந்த சமநிலையைப் பேணக்கூடியதாகவும் இருத்தல் இந்த ரோபோவின் மற்றும் சில சிறப்பியல்புகளாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்