iCloud இல் தவறுதலாக கோப்பு ஒன்றினை அழித்தால் மீளப் பெறுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

iCloud என்பது ஆப்பிள் சாதனங்களின் ஒன்லைன் சேமிப்பு வசதி சேவையாகும்.

இதில் பதிவேற்றம் செய்யப்படும் கோப்புக்கள் தற்செயலாக அழிந்தால் அவற்றினை மீட்பதற்கான வழிமுறை ஒன்று உள்ளது.

இதனை செயற்படுத்துவதற்கு இணைய உலாவியினை திறந்து iCloud.com தளத்திற்கு செல்லவும்.

பின்னர் ஆப்பிளின் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும்.

உள்நுழைந்த பின்னர் Account Settings பகுதிக்கு செல்லவும்.

அங்கு Advance எனும் பகுதிக்கு சென்று Restore Files என்பதை தெரிவு செய்யவும்.

அண்மையில் அழிக்கப்பட்ட கோப்புக்கள் அனைத்தும் லோட் ஆகும் வரை காத்திருக்கவும்.

பின்னர் மீட்க வேண்டிய கோப்புக்களை தனித்தனியாவோ அல்லது ஒரே நேரத்தில் அனைத்துக் கோப்புக்களையும் தெரிவு செய்யவும்.

அதனைத் தொடர்ந்து Restore பொத்தானை கிளிக் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.

இச் செயன்முறை நிறைவடைந்ததும் Done பொத்தானை கிளிக் செய்யவும்.

இப்போது அழிக்கப்பட்ட கோப்புக்கள் மீட்கப்பட்டிருக்கும்.

iOS அல்லது iPadOS சாதனங்களை பயன்படுத்தின் Recently Deleted எனும் தெரிவினுள் சென்று அழிந்து கோப்புக்களை மீட்க முடியும்.

எவ்வாறெனினும் கோப்புக்கள் அழிக்கப்பட்டு 30 நாட்களுக்கு முன்னர் மாத்திரமே இச் செயன்முறை சாத்தியமாகும்.

30 நாட்களை கடப்பின் கோப்புக்கள் நிரந்தரமாக iColud இலிருந்து அழிக்கப்பட்டுவிடும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers