புத்தம் புதிய வசதியுடன் Google Translate

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Google Translate வசதியானது பல மொழிகளிலும் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதனால் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

இவ்வாறான அப்பிளிக்கேஷனில் தற்போது மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கணவே பதிவு செய்யப்பட்ட ஒலி வடிவங்களை மொழிமாற்றம் செய்து எழுத்து வடிவில் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் இவ் வசதியானது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்கு மாத்திரமே கிடைக்கின்றது.

இவ் வருட ஆரம்பத்தில் இவ் வசதிக்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட்டுவந்த நிலையிலேயே தற்போது அனைத்து அன்ரோயிட் பயனர்களுக்கும் கிடைக்கச் செய்துள்ளது கூகுள்.

விரைவில் ஆப்பிளின் iOS பயனர்களும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறெனினும் இவ் வசதியானது தற்போது English, French, German, Hindi, Russian, Portuguese, Thai மற்றும் Spanish மொழிகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்