குழந்தை வரம் வேண்டுமா? இதோ எளிய நாட்டு வைத்தியம்

Report Print Kavitha in கர்ப்பம்

திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் போது தம்பதிகள் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாகி விடுகின்றார்கள்.

இதற்கு தவறான முறையில் கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட மருந்துகளை அனோகமானோர் வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.

இதற்கு நாம் சித்தர்களில் அக்காலத்தில் கையாண்ட எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ தீர்க்கும் இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணங்களை பார்ப்போம்.

குல்கந்து

ரோஜா மலர் இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகின்றது.

குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

பூசணிக்காய் லேகியம்

பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இலுப்பை பூ

ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

ஆலம்பழம்

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைத்து பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலட்டு நீங்கி குழந்தை பிறக்கும்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்