சொர்க்கத்தின் சாவி- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

Report Print Fathima Fathima in மதம்

இந்தியாவின் பழமை வாய்ந்த வழிபாடுகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி.

இத்தகைய வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

சீனா

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு, குப்தர் காலத்தில் வருகை புரிந்த பாஹியான் தான், புத்தர் சிலையை சீனாவுக்கு கொண்டு சென்றவர் என்று கூறப்படுகிறது.

இயந்திர வடிவில் வழிபடுகின்ற விநாயகர் சிலைக்கு, குவன் ஹீபியின் எனப் பெயர் உள்ளது. மலைசரிவுகளில் விநாயகர் வடிவம் காணப்படுகின்றது.

துன்ஹவாங் குங்க்சியான் முதலிய இடங்களில் உள்ள குடவரை கோவில்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன.

ஜப்பான்

சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம். "கோல்சோடைஷி' என்பவர் கொண்டு போனதாய் கூறுகிறார்கள்.

"கான்கிட்டன் ஹாயக்ஷட” என்று, விநாயகருக்கு ஜப்பானில் பெயர்கள் உள்ளன. யோகநிலையில் விநாயகர் டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயகர் சிலைகள், 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது.

தாய்லாந்து

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில், கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.

நான்முக விநாயகரும், அந்நாட்டில் பிரபலம். கம்போடியா: கம்போடியாவில் சோக்குஸ் (சந்தனகிரி) விநாயகர், மூன்று கண்கள், பூநூல், ஒற்றைக்கொம்பு, கமண்டலம் ஆகியவற்றுடன், "பிராசுஷேஸ்' என்னும் பெயரில் இருக்கிறார்.

விநாயகர் சிலையில் தந்தமும், சுவடியும் இருந்தால் "வித்யபிரதாதா' என்று பெயர்.

எகிப்து

எகிப்து நாட்டில் விநாயகர் கையில், சாவி இருக்கிறது.

ரோம் நாட்டு ஜேன்ஸ் கடவுளின் ஒரு முகம், யானை வடிவத்துடன் கையில் சாவியுடன் காணப்படுகிறது .

அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில், விக்டோரியா மாநிலத்தில் வக்ரதுண்ட விநாயகர் கோவிலும், வடக்கு பகுதியில் சித்திவிநாயகர் கோவிலும், குயீன்ஸ்லாந்தில் செல்வவிநாயகர் கோவிலும், தெற்கு அவுஸ்திரேலியாவில் கணேசர் கோவிலும் உள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் உள்ள பேசின் என்னும் மெல்போர்ன் புறநகர்ப் பகுதியில், தென்னிந்திய மரபில், வக்ரதுண்ட விநாயகர் கோவில் உள்ளது. அவுஸ்திரேலியா அரசு 1987ல் உருவான இந்து சங்கத்துக்கு, நிலத்தை குத்தகைக்கு இனாமாக வழங்கிய இடத்தில், மாமல்லபுரத்திலிருந்து 1993ல் மூன்று சிற்பிகளை வரவழைத்து இக்கோவிலை வடிவமைத்துள்ளனர்.

அடிலாய்ட் நகரில், 1985ல் இந்துசங்கம் நிறுவி, விநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 1986ல், விநாயகருக்கு மட்டுமே முதலில் உருவான இக்கோவில், அப்போதைய அவுஸ்திரேலியாவில் இரண்டாவது கோவிலாகும்.

இதேபோன்று ரஷ்யாவில் அஜாபைஜான், ஆர்மினியா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அங்கும் விநாயகர் வழிபாடு சிறந்து இருந்தமைக்கு சான்றாக விளங்குகின்றன.

நேபாள நாட்டிலும் விநாயகர் வழிபாடு சிறந்து விளங்குகிறது. இவையன்றி தமிழர்கள் கால் பதித்த சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் விநாயகர் வழிபாடும், விநாயகர் சதுர்த்தி விழாவும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments