அனைத்து விதமான கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும் எளிய பரிகாரம்

Report Print Jayapradha in மதம்
129Shares
129Shares
ibctamil.com

சில பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் தோஷம் அனைத்தும் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

சிலரது ஜாதகத்தில் சில நவகிரகங்களின் தோஷம் இருப்பதால் சில சிக்கல்கள் விளைகின்றன. அத்தகைய தோஷங்களை எளிய முறையில் போக்கி வாழ்வில் வளம்பெற செய்யும் எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

சூரிய தோஷம்

வீட்டின் பூஜை அறையில் சூரிய பகவானின் படத்தை வைத்து கோதுமையால் செய்யப்பட்ட ஏதேனும் இனிப்பு வகைகளை சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் சூரிய தோஷம் நிவர்த்தி ஆகும்.

சந்திர தோஷம்

திங்கட்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, துர்கை அம்மனுக்கு வெள்ளை அரளி மாலை சார்த்தி சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் சந்திர தோஷம் நிவர்த்தி ஆகும்.

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட செவ்வாய் கிழமை அன்றும், செவ்வாய் தசை மற்றும் செவ்வாய் புக்தி காலத்திலும் விரதம் இருந்து, செண்பக மலரால் செய்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

புதன் தோஷம்

புதன் கிழமை அன்றும், புதை தசை மற்றும் புதன் புத்தி காலத்திலும் புத பகவானுக்கு வெண் காந்தள் மலர் கொண்டு அர்ச்சனை செய்து புதன் பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

குரு தோஷம்

வியாழக்கிழமை அன்றும், குரு தசை மற்றும் குரு புக்தி காலத்திலும் விரதம் இருந்து, குரு பகவானுக்கு முல்லை மலர் கொண்டு அர்ச்சனை செய்து குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர குருவால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

சுக்கிரன் தோஷம்

வெள்ளிக்கிழமை அன்றும், சுக்கிர தசை மற்றும் சுக்கிர புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சுக்கிர பகவானுக்கு வெண்தாமரை மலரால் பூஜை செய்து சுக்கிரன் காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

சனி தோஷம்

சனிக்கிழமை அன்றும், சனி தசை மற்றும் சனி புக்தி காலத்திலும் விரதம் இருந்து, சனி பகவானுக்கு கருங்குவளை மலரால் அர்ச்சனை செய்து சனி காயத்ரி மந்திரத்தை 26 முறை ஜெபிப்பதோடு, காகத்திற்கு சனிக்கிழமைகளில் சாதம் வைத்து வந்தால் சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

ராகு தோஷம்

வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புக்தி காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

கேது தோஷம்

திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்