புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடிய புதிய பதார்த்தம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

குருதி நெல்லி (Cranberries) மற்றும் மேலும் சில வகையான பழங்களில் இருந்து பெறப்படும் Mannose எனப்படும் வெல்லம் புற்றுநோய்க்கு எதிராக போராடக்கூடியது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனை சுண்டெலிகளில் ஏற்படும் தோற்புற்று நோய், சுவாசப்பை புற்றுநோய் மற்றும் ஈரல் புற்றுநோய் என்பவற்றிற்கு எதிராக பரிசோதனை செய்துள்ளனர்.

இதன்போது வெற்றிகரமான பெறுபேறு கிடைக்கப்பெற்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையின்போது புற்றுநோய் கட்டிகள் வளரும் வீதத்தினை இவை கட்டுப்படுத்தியதுடன், பக்கவிளைவுகள் எவற்றினையும் காண்பிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரோக்கியமான உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யப்படும் அங்காடிகளில் பெறக்கூடிய Mannose வெல்லமானது தற்போது சிறுநீர்ப் பாதை தொற்றுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இது இரசாயன மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் விரைவில் மனிதர்களிலும் புற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers