வானிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பிய வீரர்கள்.. மீண்டும் தயாராகும் சோயுஸ் விண்கலம்!

Report Print Kabilan in விஞ்ஞானம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்வதற்காக, ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் புறப்படுவதற்கு கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் விண்வெளி வீரர்களுடன் சோயுஸ் விண்கலம், கஜகஸ்தானில் இருந்து புறப்பட்டது. ஆனால், விண்கலத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அதில் பயணித்த வீரர்கள், உடனடியாக அவசர வழியில் இருந்து தனி கேப்சூல் மூலம் கீழே குதித்து உயிர் தப்பினர். இதன் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர், சோதனை ரீதியாக மூன்று முறை ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றதால், மீண்டும் சோயுஸ் விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த விண்கலம் விண்வெளிக்கு அனுப்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் ஒலேக் கோனோநென்கோ, கனடாவின் டேவிட் செயிண்ட் ஜாக்குஸ், அமெரிக்காவின் மெக்கிளெயின் ஆகியோர் நாளை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்