ஒரே நாளில் சந்திரயான் 2 விண்கலப் பயணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
68Shares

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜுலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலத்தினை விண்ணில் ஏவியிருந்தது.

சந்திரனின் மர்மமான பகுதியியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம் இதுவரை 5 தடவைகள் சுற்றுவட்டப் பாதையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இன்றுவரை பூமியையே சுற்றி வருகின்றது.

இந்நிலையில் ஒரே நாளில் சந்திரனின் ஈர்ப்பினுள் நுழைந்து சந்திரனை சுற்றி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம் திகதி சந்திரனில் சந்திரயான் 2 தரையிறங்கவுள்ளது.

இந்த தகவலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான Indian Space Research Organisation (ISRO) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்