விண்வெளியில் இணைய இணைப்பிற்காக 30,000 செயற்கைக் கோள்கள் ஏவ திட்டம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

Tesla நிறுவனமானது அதிநவீன கார் வடிவமைப்பு மற்றும் SpaceX திட்டத்தின் கீழான செயற்கைக்கோள்களை ஏவுதல் போன்றவற்றினை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் Elon Musk விண்வெளியில் 30,000 செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

இவை அனைத்தும் மிக வேகமான இணைய இணைப்பினை வழங்குவதற்காகவாகும்.

ஏற்கனவே 12,000 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே தற்போது 30,000 செயற்கைக்கோள்களை ஏவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 12,000 செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான அனுமதியை ஏற்கனவே அமெரிக்காவின் Federal Communications Commission (FCC) அமைப்பிடம் பெறப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்