சொந்த அண்ணன் மற்றும் நண்பர்களால் கொடூரமாக சிதைக்கப்பட்ட 9 வயது சிறுமி: நெஞ்சை பிசையும் சம்பவம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் சொந்த அண்ணன் மற்றும் அவரது நண்பர்களால் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, அமிலம் ஊற்றிச் சிதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் கதுவா பகுதி சிறுமியின் அந்த வயலட் நிற உடையும், வன்கொடுமையால் உயிரிழந்துகிடந்த அந்தப் பிஞ்சு முகமும் இன்னமும் மனக்கண்களைவிட்டு அகலாத நிலையில், மீண்டும் ஒரு சிறுமியின் ரத்தம் இந்தியாவில் சிந்தப்பட்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு 23 ஆம் திகதியில் இருந்து மாயமான தமது மகளை தேடித்தரும்படி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை.

புகாரை அடுத்து பொலிசார் தீவிரமாக தேட ஆரம்பித்தது. 10 நாட்கள் கடந்த நிலையில் காட்டுப் பகுதியின் உள்ளே அழுகிய நிலையில் சிறுமியின் உடல் பொலிசாரால் மீட்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கியது அவளின் பெரியம்மா மகன் மற்றும் நண்பர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

தங்கையிடமே ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டான் என விசாரித்ததில் காவல்துறையையே நடுங்க வைக்கும் குரூரமான உண்மைகள் வெளிவந்தன.

இறந்த சிறுமியின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியைவிட, இரண்டாவது மனைவி மீதும் அவர் மகள் மீதும் மிகுந்த பிரியமாக இருந்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட பொறாமையில், 9 வயதுச் சிறுமியைப் பழி தீர்த்துக்கொண்டிருக்கிறாள் அந்தப் பெரியம்மா.

சம்பவம் நடந்த நாளில் அந்தச் சிறுமியிடம் அன்பாகப் பேசி, அவர்களின் வசிப்பிடத்தையொட்டி 1 கி.மீ தொலைவிலிருந்த காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் பெரியம்மா.

பின்னர் தன் மகன் மற்றும் அவன் நண்பர்களையும் வரவைத்து, இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், சொந்தத் தங்கையை வன்கொடுமை செய்த அந்த அண்ணனுக்கு 14 வயதுதான் ஆகிறது.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தரையில் கிடந்த சிறுமியின் கழுத்தையும் நெரித்துள்ளார். அப்போதும் உயிர் இருந்த சிறுமியின் தலையில் சுத்தியலால் பலமுறை தாக்கினாராம்.

இந்தக் கொடூரத்தின்போது நண்பர்களில் ஒருவன், சிறுமியின் கண்களைத் தோண்டி எடுத்திருக்கிறான். இறுதியில், உயிரிழந்த அந்தப் பிஞ்சு உடலை எரித்திருக்கிறார்கள்.

சாட்சியைச் சுத்தமாக அழிக்க வேண்டும் என்று அமிலம் ஊற்றியும் சிதைத்திருக்கிறார்கள். மிச்சம் மீதி உடலைப் புதருக்குள் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

சமீபத்தில் அரசு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகளில் 70 சதவிகிதம் பேர், நெருக்கமான உறவினர்களால்தாம் பாதிக்கப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers