அந்தமான் தீவில் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட இளைஞன்: அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய தகவல்

Report Print Santhan in தெற்காசியா

அந்தமான் தீவில் ஆதிவாசிகளால் கொலை செய்யப்பட்ட இளைஞன் பற்றி சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜான் ஆலன் ஜாவ் என்ற 27 வயது இளைஞன் கடந்த மாதம் அந்தமானுக்குச் சுற்றுலா சென்ற போது பலவேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தார்.

அதன் பின் பழங்குடியினர் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல ஆசைப்பட்டார். ஆனால் இந்தப் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல மாட்டார்கள்.

ஏனெனில் அங்கு இருக்கும் பிற மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். வெளியாட்களை கண்டால் அம்புகளால் தாக்கவர்.

இது போன்ற நிலை இருக்கும் போது தான் ஜான் ஆலன் அங்கிருக்கும் மீனவர்கள் உதவியுடன் தீவுக்குள் சென்றார். அப்போது அங்கு சென்ற அவரை பழங்குடி மக்கள் கொலை செய்து புதைத்தனர்.

அவரது உடலை மீட்கும் பணியில் பொலிசார் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டாலும், அங்கிருக்கும் மக்கள் அவர்களை அம்புகளால் தாக்குவதால், உடலை மீட்பது கடினம் என்று பொலிசார் தெரிவித்திருந்தனர்.

முதலில் அம்பால் குத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட அவரை, பழங்குடியினர் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அந்தமானின் பழங்குடியின தேசிய ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் ஜான் ஆலன் சாவ், திட்டமிட்ட சாகசப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டினர் இங்குள்ள தீவுகளில் உள்ள பழங்குடியினர் மீது எப்போதும் ஆர்வமாக இருக்கின்றனர். கடந்த காலங்களில் அவர்களைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றுள்ளனர். பழங்குடியினரைக் காக்க வேண்டியது அவசியம். அவர்களின் வாழ்விடங்களில் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது.

சுற்றுலாப் பயணிகள் தீவுகளுக்குள் செல்ல வனத்துறையிடம் இருந்தும், அந்தமான் நிர்வாகத்திடம் இருந்தும் அனுமதி பெறவேண்டும். சென் டினல் பழங்குடியினரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது பழங்குடியின ஆணை யம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers