அப்பா போன்று நினைத்தேன்.. சீரழித்து விட்டார்! பிரபல இயக்குனரை பற்றி வேதனையுடன் கூறிய இளம்பெண்

Report Print Santhan in தெற்காசியா

அப்பாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தினால் தான், இயக்குனர் கொடுத்த பாலியல் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டேன் என்று இயக்குனரின் பெண் உதவியாளர் வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிராணி மீது, அவரின் பெண் உதவி இயக்குனர் கூறிய புகார் பாலிவுட் உலகையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜ்குமார் ஹிராணி 3 இடியட்ஸ், பி.கே., சஞ்சு உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து திரைப்பிரபலங்கள் மற்றும் மக்கள் மனதில் தனக்கென்று ஒரு நன்மதிப்பை பெற்றவர். இவரா இப்படி என்று பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த பெண் கூறுகையில், நான் ராஜ்குமார் ஹிராணியை என் தந்தை போன்று நினைத்தேன். ஆனால் அவரோ கடந்த 2018-ஆம் ஆண்டு அலுவலகத்தில் இருந்த போது, ஆபாசமாக பேசினார். அதன் பின் எனக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார்.

இது தவறு சார், நான் உங்களை என் அப்பா போன்று நினைத்திருக்கிறேன் என்று கூறிய போதும் அவர் எல்லை மீறினார்.

நீங்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக இப்படி செய்யக் கூடாது என்று மின்னஞ்சல் அனுப்பினேன்.

என் மனம், உடல், இதயம் ஆகியவை அந்த இரவில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு கொடுமைப்படுத்தப்பட்டது.

அப்போது என் தந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால், என்னால் வேலையை விட முடியவில்லை. எனக்கு வேலை தேவை, அப்பாவின் சிகிச்சைக்கு பணம் தேவை.

அதன் காரணமாகவே இந்த கொடுமையை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். இதை அவர் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இருப்பினும் தாங்கினேன். என் வேலை பறிபோவதை விரும்பவில்லை. நான் திடீர் என்று வேலையை விட்டால் சினிமா துறையில் வேறு எங்கும் வேலை கிடைப்பது கடினம்.

அதுமட்டுமின்றி திரைத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் ராஜ்குமார் ஹிரானி என்னை பற்றி ஏதாவது தவறாக ஒரு வார்த்தை கூறிவிட்டால் கூட யாரும் என்னை வேலைக்கு சேர்க்க மாட்டார்கள்.

அவரின் பேச்சை தான் அனைவரும் கேட்பார்கள். அதன் பின் என் எதிர்காலம் கேள்வி குறி என்பதாலே அமைதியாக இருந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் ராஜ்குமார் ஹிராணியோ இதை முற்றிலும் மறுத்து, என் பெயரை கெடுக்க வேண்டும் என்றே இப்படி ஒரு சதித்திட்டம் நடப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers