சில மணிநேரத்தில் திருமணம்.. மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு மணப்பெண்ணை துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் பஸில்கா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு தமது திருமணத்துக்காக அழகு நிலையத்துக்கு சென்று ஆயத்தமாகி பின் வெளியே வந்தார்.

அப்போது அங்கு கையில் துப்பாக்கியோடு காத்திருந்த 7 ரவுடிகள் மணப்பெண்ணை கடத்தி, சாலையோரம் தயாராக இருந்த காரில் ஏற்றினர். இதைக் கடுமையாக எதிர்த்த பெண் இயன்ற வரை போராடியும் அவரால் கடத்தலில் இருந்து தப்ப முடியவில்லை.

தரையில் விழுந்த பெண்ணை தூக்கிக் கொண்டு சென்று காரில் கடத்தினர்.

இதுகுறித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வைரலானதை அடுத்து, அப்பெண்ணை பெரோஸெபூர் கிராமத்தில் கடத்தல்காரர்கள் இறக்கிவிட்டுச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers