தூக்கில் சடலமாக தொங்கிய இளம் பெண் மருத்துவர்... அவர் செல்போனில் இருந்த ஒரு புகைப்படம்!

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் புகைப்படமாக அவர் செல்போனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மும்பையை சேர்ந்த இளம்பெண் பயல் தட்வி. இவர் மருத்துவர் ஆவார்.

பயல் கடந்த மே மாதம் 22ஆம் திகதி தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சக பெண் மருத்துவர்கள் சாதி ரீதியாக பேசி பயலை துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.

இதனிடையில் சம்பவம் தொடர்பாக ஹேமா அஹுஜா, அன்கிதா, மேரே ஆகிய மூன்று மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பயல் இறப்பதற்கு முன்னர் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் அது முக்கிய ஆதாரம் என்பதால் குற்றவாளிகள் அதை அழிக்க முயன்றதாகவும் கூறப்பட்டது.

இந்த சூழலில் பயல் எழுதி வைத்திருந்த கடிதத்தின் ஸ்கீரின் ஷாட் புகைப்படத்தை அவர் செல்போனில் இருந்து தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளதாக பயலின் வழக்கறிஞர் குணரத்னா கூறியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், மூன்று பெண் மருத்துவர்களின் பெயர்களும், அவர்கள் தன்னை எப்படியெல்லாம் சாதி ரீதியாக மோசமாக பேசி துன்புறுத்தினார்கள் என்றும் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.

குணரத்னா கூறுகையில், கடிதம் குறித்து அறிந்துள்ள மூன்று மருத்துவர்கள் அதை அழிக்க முயன்றனர்.

தற்போது அதை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியுள்ளனர்.

குற்றவாளிகளான மூன்று பேருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க போராடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்