தூக்கில் தொங்க போகும் நிர்பயா வழக்கின் 4 குற்றவாளிகளின் கடைசி ஆசை என்ன? கேட்கப்பட்ட கேள்வி

Report Print Raju Raju in தெற்காசியா

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளிடம், உங்களின் கடைசி ஆசை என்ன என்று திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு பிப்ரவரி 1ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இவர்களின் சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஜனாதிபதி, உள்துறை அமைச்சகம் என அனைத்து தரப்பிலும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

ஆனால், கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த 14 நாட்களுக்கு பிறகே தூக்கிலிட வேண்டும் என்ற விதியை, தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பாக குற்றவாளிகள் கருதுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், வரும் 1ம் திகதி தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உங்களின் கடைசி ஆசை என்ன? என கடைசியாக குடும்ப உறுப்பினர்களை சந்திப்பது, சொத்துக்களை யாருக்கு அளிப்பது? என்பது குறித்து நிர்பயா குற்றவாளிகளிடம் திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது

இதுவரை 4 பேரும் தங்களின் கடைசி ஆசை பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்