வீட்டு படுக்கையில் இறந்து கிடந்த 9 வயது மகள்! அவர் தாயாரிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை

Report Print Raju Raju in தெற்காசியா
1299Shares

இந்தியாவில் 9 வயது மகளை கொலை செய்து விட்டு நாடகமாடிய தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் தர்யாபாத் கிராமத்தை சேர்ந்த தம்பதி மகேஷ் - மோனி. இவர்களுக்கு அன்ஷிகா (9) என்ற மகள் இருந்தார்.

இந்த நிலையில் அன்ஷிகா தனது வீட்டு படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வயல்வெளி வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த மகேஷ் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது வீட்டில் இருந்த சில முக்கிய தடயங்கள் மூலம் அன்ஷிகா கொலையில் அவர் குடும்பத்தாருக்கு தொடர்பு இருப்பதை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து மகேஷ் மற்றும் மோனியை பொலிசார் தனித்தனியாக விசாரித்தனர். மகள் இறப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மௌனத்தையே பதிலாக கொடுத்து நாடகமாடினார் மோனி.

ஆனால் அவர் மீது பொலிசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்ததால் தங்கள் பாணியில் விசாரித்தனர்.

அப்போது மகளை கொன்றதை மோனி ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் தேவி பிரசாத் என்பவருக்கும் தொடர்பு இருந்தது.

சம்பவத்தன்று என் கணவர் வெளியில் சென்ற போது, பிரசாத் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் நாங்கள் தனிமையில் இருந்ததை அன்ஷிகா பார்த்து விட்டார், மேலும் இந்த விடயத்தை மகேஷிடம் சொல்லிவிடுவேன் எனக் கூறினார்.

இதனால் பயந்து போன நான் பிரசாத் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அன்ஷிகாவின் கழுத்தை நெரித்துக் கொன்றேன் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பொலிசார் மோனி, பிரசாத் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்