தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த தந்தை கூறிய காரணம்! 6வதாக கருத்தரித்த மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Raju Raju in தெற்காசியா
4189Shares

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்துள்ள தந்தையின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்த்தின் தித்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ஜுமாதின் (38). இவர் தான் தனது பெற்ற குழந்தைகளை கொலை செய்துள்ள கொடூர தந்தையாவார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், தனது ஐந்து குழந்தைகளையும் கொலை செய்துவிட்டதாக ஜுமாதின் சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் ஜுமாதின் மனைவி ஆறாம் முறையாக கர்ப்பமாக உள்ளார். கடந்த 15ஆம் திகதி ஜுமாதினின் 11 மற்றும் 7 வயதுடைய 2 மகள்கள் காணாமல் போயுள்ளனர்.

இதையடுத்து 16ஆம் திகதி இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார்.

மேலும் தனது மனைவி ரீனாவுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது தனது இரண்டு மகள்களையும் மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக ஜுமாதின் கூறினார்.

இது குறித்து நாங்கள் மேலும் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

இதனிடையில் 20ஆம் திகதி காணாமல் போன இரண்டு சிறுமிகளும் கால்வாயில் சடலமாக கிடந்தனர்.

இதன்பின்னர் ரீனாவின் சகோதரர் அசன், இந்த மரணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார்.

அந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எங்களிடம் ஜுமாதின் தனது குழந்தைகளை கொன்றதாக தங்களிடம் கூறினார் என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினோம். அதில் கடந்த 2017ல் தனது மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஜுமாதின் கூறினார்.

2019ல் இன்னொரு குழந்தையை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் அடுத்த இரண்டு குழந்தைகளையும் கால்வாயில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.

ஆக மொத்தம் ஐந்து குழந்தைகளையும் ஜுமாதின் தான் கொன்றுள்ளார்.

அவரின் மனநிலையில் பிரச்சனை உள்ளது, அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சையளிக்கவுள்ளனர்.

குழந்தைகளை வளர்க்கும் நிதி திறன் தன்னிடம் இல்லாததால் கொன்றேன் என எங்களிடம் ஜுமாதின் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மனநல மருத்துவர் உதவியுடன் மேலும் விசாரிக்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.

தனது ஐந்து கொலைகளையும் கொலை செய்த தந்தையின் செயல் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்